புதுதில்லி, மே 24- கொரோனா நெருக்கடியிலிருந்து வாகனத் தொழில்கள் மீள நீண்டகாலம் ஆகுமென போஸ் இயக்குநர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே மந்தநிலையிலிருந்த உலகளாவிய வாகனத்துறையை மீட்டெடுக்க குறைந்தபட்சம் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஆகும் என்று போஷ் இயக்குநர் தெரிவித்துள்ளார். போஷ் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சுமித்ரா பட்டாச்சார்யா கூறுகையில், பொருளாதாரம் மந்த நிலையால் வாகனத் தொழில் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் பின்னடைவை சந்தித்துள்ளது. கொரோனா நெருக்கடி மேம் 1.5 முதல் 2 ஆண்டுகள் வரை வாகனத்துறையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. “முழு தொழிற்துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கும் நாங்களும் விதிவிலக்கல்ல. இதிலிருந்து மீண்டெழ நீண்ட காலம் ஆகும்” என்றார்/ மேலும் அவர் கூறுகையில், போஷ் நிறுவனம் “2019-20 ஆம் ஆண்டு வணிகத்தில் 24 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. உள்நாட்டு விற்பனை 26சதவீதம் குறைந்துள்ளது. ஏற்றுமதி 6 சதவீதம் குறைந்துள்ளது. வாகனத் துறையின் மந்தநிலை காரணமாக மின்சார பவர்டிரெய்ன் வணிகம் 30 சதவீதம் குறைந்துள்ளது. நிறுவனத்தின் பிற வணிகங்கள் 14 சதவீதம் குறைந்துவிட்டது.