tamilnadu

img

வந்தே பாரத் மிஷன்: ஹாங்காங்கிற்கு ஏர் இந்தியா விமானங்களுக்கு தடை

கொரோனா தொற்றுநோயை அடுத்து பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக வந்தே பாரத் மிஷன் மே மாத தொடக்கத்தில் துவங்கியது.

கொரோனா தொடர்பான பிரச்சினைகள் காரணமாக ஏர் இந்தியாவின் வந்தே பாரத் மிஷன் விமானங்களை ஹாங்காங்கிற்கு மற்றும் அங்கிருந்து வரவும்  ஹாங்காங் அதிகாரிகள் தடை செய்துள்ளனர்.

இது குறித்து ஏர் இந்தியா செய்த ட்டீட்டில் கூறுகையில்,

ஹாங்காங் அதிகாரிகள் விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக, AI 310/315, தில்லி - ஹாங்காங் - ஆகஸ்ட் 18, 2020 டெல்லி விமானம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அடுத்த தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும். பயணிகள் உதவிக்கு ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ளலாம்.

கடந்த வாரம், இந்திய துணைத் தூதரகம், ஹாங்காங் ஆகஸ்ட் 18 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஹாங்காங்கிலிருந்து டெல்லிக்கு இரண்டு வந்தே பாரத் மிஷன் விமானங்களை இயக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்திர மாநாட்டில், வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், மொத்தம் 10.5 லட்சம் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் மிஷனின் கீழ் பல்வேறு முறைகள் மூலம் திரும்பி வந்துள்ளனர் என்று கூறியுள்ளார்.

;