tamilnadu

img

புதுவையில் வைத்திலிங்கம் வெற்றி முகம்

புதுச்சேரி,மே 23-புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் வெ.வைத்திலிங்கமும், அதிமுக-பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர். கே.நாராயணசாமி போட்டியிட்டனர். இந்த தொகுதியில் பதிவான வாக்குகள் புதுச்சேரி லாஸ்பேட்டை பெண்கள் தொழில்நுட்பக் கல்லூரியில் காலை 8 மணிக்கு வாக்குகள் என்னும் பணி துவங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. பின்னர் வாக்கு எண்ணிக்கை எந்திரங்களில் உள்ள ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகிறது.ஓட்டு எண்ணிக்கை துவங்கியதிலிருந்தே காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் முன்னிலை பெற்று வந்தார். காலை 10.40 மணி நிலவரப்படி முதல் சுற்றில் வைத்திலிங்கம் 63,884 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்தார். அவருக்கு அடுத்தபடியாக வந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு 34,782 வாக்குகள் கிடைத்தன. முதல் சுற்றில் வாக்கு வித்தியாசம் 29,102. 12 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில் காங்கிரஸ் வேட்பாளர் 1,77,340 வாக்குகளும், என். ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 92,048 வாக்குகளும் பெற்றிருந்தனர். அதிமுக கூட்டணி தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. மாலை 5 மணி நிலவரப்படி எண்ணப்பட்ட 4,44,480வாக்குகளில் வைத்திலிங்கத்திற்கு 2,58,611, டாக்டர் நாராயணசாமிக்கு 1,32,404 வாக்குகள் பெற்றிருந்தார். இதன் மூலம் 1,26,107 வாக்குகள்கூடுதலாக பெற்று வைத்திலிங்கம் தொடர்ந்து முன்னிலை வகித்தார். ஒவ்வொரு சுற்றின் முடிவிலும் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலை வெற்றி முகத்தில் இருக்கிறார்.

;