tamilnadu

img

இந்தியாவில் 85 லட்சத்தை தாண்டியா கொரோனா தொற்று எண்ணிக்கை

இந்தியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 85 லட்சத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. இது நாட்டின் ஒட்டுமொத்த தொற்றுக்களின் எண்ணிக்கை 85,07,754 ஆக அதிகரித்துள்ளதாக என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 49,082 புதிய குணமடைந்துள்ளனர். மொத்த சிகிச்சையில் உள்ள தொற்றுகள் 5,12,665 அதிகரித்துள்ளது. மேலும், ஒட்டுமொத்த குணமடைந்தவர்கள் 78,68,968 ஆக உள்ளன.
கொரோனா தொற்று காரணமாக நாட்டின் இறப்பு எண்ணிக்கை இன்று 559 இறப்புகளுக்குப் பிறகு 1,26,121 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 1,00,068 தொற்றுகள், 15,69,090 குணமடைந்துள்ளனர். 45,115 இறப்புகள் பதிவாகியுள்ளன, கர்நாடகாவில் இதுவரை 33,339  சிகிச்சையில் உள்ளது. 7,99,439 குணமடைந்துள்ளனர். 11,369 இறப்புகள் பதிவாகியுள்ளன.
தேசிய தலைநகரில் 40,258 சிகிச்சையிலும்,  6,912 இறப்புகளும் பதிவாகியுள்ளன, 3,83,614 பேர் தொற்றுநோயிலிருந்து குணமடைந்துள்ளனர். கேரளாவில் 83,377 தொற்றுகளும், 3,95,624 குணமடைந்துள்ளனர் மற்றும் இறப்பு எண்ணிக்கை 1,668 ஆக இருந்தது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) படி, நவம்பர் 7 ஆம் தேதி வரை மொத்தம் 11,77,36,791 மாதிரிகள் கொரோனா தொற்றுகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 11,94,487 மாதிரிகள் நேற்று பரிசோதிக்கப்பட்டன. கொரோனாவின் இந்தியாவின் இறப்பு விகிதம் (சி.எஃப்.ஆர்) 1.48 சதவிகிதத்தை தொட்டுள்ளது.