புதுச்சேரி, ஆக. 17- கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரிக்கக் கோரி திங்களன்று (ஆக. 17) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா பரிசோதனை மையங்களை அதிகரித்து, அனை வருக்கும் பரிசோதனை மேற் கொள்ள வேண்டும், சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு மருத்துவ வசதிகளை அதிக ரிக்க வேண்டும், தொற்று நோயால் வாழ்வாதாரம் இழுந்துள்ள குடும்பம் ஒன்றுக்கு 7,500 ரூபாய் வீதம் 6 மாதங்க ளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், புதுச்சேரியின் பாரம்பரியமான ஏ.எஃப்.டி.பஞ்சாலையை மூடுவதை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. புதுச்சேரி முதலியார்பேட்டை வான்னொலி திடல் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர்சீனுவாசன், பிரதேசக் குழு உறுப்பினர் கலியமூர்த்தி, நகரக்குழு உறுப்பினர்கள் பொன்னுரங்கம், மணவாலன், ஜெக தீசன், ராமலிங்கம், ஜோதிபாசு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.