tamilnadu

img

சிக்கிமில் மாநிலக் கட்சி; அருணாச்சலில் பாஜக

புதுதில்லி:
மக்களவைத் தேர்தலோடு, ஆந்திரா, ஒடிசா,அருணாசல பிரதேசம், சிக் கிம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது. இதில், ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் ஆகிய கட்சிகள் ஆட்சியைப் பிடித்துள்ளன. இந்நிலையில், சிக்கிம் மாநிலத்தில் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

26 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சாகட்சி 14 இடங்களிலும், சிக்கிம் ஜனநாயக முன்னணி 12 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. அருணாசல பிரதேசத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள 40 தொகுதிகளில் பாஜக 26 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் 4 இடங்களிலும், ஐக்கியஜனதாதளம் 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
 

;