tamilnadu

img

சிக்கிம் மாநிலத்தில் சாம்லிங் கட்சி தோல்வி

காங்டாக்:
சிக்கிம் மாநிலத்தில் தொடர்ந்து 25 ஆண்டுகளாக முதல்வராக இருந்துவந்த  பவன்குமார் சாம்லிங், ஆட்சியைப் பறிகொடுத்துள்ளார்.இங்கு சாம்லிங்கின், சிக்கிம் ஜனநாயக கட்சியை வீழ்த்தி, சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா வெற்றிபெற்றுள்ளது.

1993ஆம் ஆண்டு சிக்கிம் ஜனநாயக முன்னணி எனும் கட்சியை நிறுவிய பவன்குமார் சாம்லிங், அதற்கு அடுத்தாண்டு 1994-இல் நடந்த சட்டமன்றத் தேர்தலிலேயே வெற்றிபெற்று, முதல்வர் பதவியைப் பிடித்தார். அதன்பின் 1999, 2004ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் சிக்கிம் ஜனநாயக முன்னணி பெரும் வெற்றிபெற்றது. 2009-ஆம் ஆண்டு நடந்த சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளிலும் அக்கட்சி பெரும் வெற்றி பெற்றது. 2014-ஆம் ஆண்டு தேர்தலின்போது 22 இடங்கள் பெற்று 5-ஆவது முறையாக முதல்வரான பவன்குமார் சாம்லிங், மேற்குவங்கத்தின் மாபெரும் தலைவர் ஜோதிபாசுவின் சாதனையை சமன் செய்தார்.

ஆனால் தற்போது 2019 தேர்தலில் சாம்லிங் கட்சி, மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 15 இடங்களை மட்டும் வென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது. சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா 17 இடங்களைப் பிடித்துள்ளது.