tamilnadu

img

புதுச்சேரி கலவை கல்லூரி கட்டிடத்தை புதுப்பித்திடுக

புதுச்சேரி, ஜூலை 14- புதுச்சேரி கலவை கல்லூரிக் கட்டிடத்தை  பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என முன்னாள் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது. புதுச்சேரி கலவை கல்லூரி  பாதுகாப்பு இயக்கத்தின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மிஷின் வீதியிலுள்ள கலவை கல்லூரி பள்ளியை பாதுகாத்திட புதுச்சேரி அரசு எதிர்வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பள்ளியை பழமை மாறாமல், புதுபிக்க தேவையான நிதியை ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரை சந்தித்து மனு அளிப்பது. மேலும் பாதுகாப்பு குழு சார்பில் வரும் 18ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் கோரிக்கை பதாகை ஏந்தி கலவை கல்லூரி பள்ளி அருகில் போராட்டம் நடத்தவுவது என தீர்மானிக்கப்பட்டது.