tamilnadu

img

கண்ணாடி தொழிற்சாலையின் தொழிலாளர் விரோத போக்கிற்கு முடிவு கட்டுக

புதுச்சேரி, ஆக. 30- துத்திப்பட்டு கண்ணாடி தொழிற்சாலை யின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என சிஐ டியு வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி தொண்டமாநத்தம் துத்திப்பட்டு  ஹிந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் பிரைவேட்  லிமிடெட் என்ற கண்ணாடி தொழிற்சாலை யில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக ஊதிய உயர்வு வழங்காமல் ஏமாற்றி வருகிறது. எனவே நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து சிஐடியு உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்ற தொழிலா ளர்களை பழிவாங்கும் வகையில் நிறுவ னத்தை சட்டவிரோதமாக லாக் அவுட் செய்து  அறிவித்தது. ஆனால் கடந்த 62 நாட்களுக்கும் மேலாக லாக் அவுட் அறிவித்த நிர்வாகம் வடமாநில தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் வேலைக்கு அமர்த்தி  தொழிற்சாலையில் உற்பத்தியை தொடர்ந்து  நடத்திக் கொண்டிருக்கிறது.
போராட்டம்
துத்திப்பட்டு ஆலையின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்து நடைபெற்று வரும் போராட்டத்தை வாழ்த்தி சிஐடியு பிர தேச தலைவர் முருகன், செயலாளர் சீனி வாசன், பொருளாளர் பிரபுராஜ், நிர்வாகி கள் கொளஞ்சியப்பன், மதிவாணன், பச்சைமுத்து ஆகியோர் பேசினார். முன்ன தாக தொழிலாளர் நலத்துறை இந்த பிரச்ச னையில் தலையிட்டு உரிய முடிவு எடுக்க வேண்டும் என்று சிஐடியு தலைவர்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

;