tamilnadu

img

புதுச்சேரியில் முழுஅடைப்பு வெற்றி

புதுச்சேரி, ஜன.8- புதுச்சேரியில் நடைபெற்ற முழுஅடைப்பு போராட்டத்தில் சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கத்தினரை காவல் துறையினர் கைது செய்தனர். விலைவாசி உயர்வை கட்டு படுத்த வேண்டும், தொழிலாளர்க ளுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதை மத்திய அரசு கைவிட வேண்டும், குடியுரிமை திருத்த சட்டத்தையும், குடிமக்கள் பதிவேடு திட்டத்தையும் கைவிட வேண்டும், கார்ப்ரேட் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் நலச்சட்ட திருத்தங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடி யுசி உள்ளிட்ட மத்திய தொழிற் சங்கங்கள் சார்பில் புதுச்சேரியில் புதனன்று (ஜன.8) முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.
முழுஅடைப்பு
 முழுஅடைப்பு போராட்டத்தால் புதுச்சேரி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. அதேபோல் ஆட்டோ, டெம்போ போன்ற வாகனங்களும் ஓடவில்லை. ஒருசில தமிழக அரசு பேருந்துகள் மட்டும் காவல்துறை பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.  திரையரங்குகளில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டன. எப்போதும் பரப்பாக இயங்க கூடிய புதுச்சேரி  பெரிய அங்காடி அதனை சுற்றியுள்ள நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி ஆகிய பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட் டன. தனியார் பள்ளிகளுக்கு விடு முறை விடப்பட்டிருந்தது.
மறியல்
புதுச்சேரி காமராஜர் சிலை எதிரே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு பிரதேசத் தலைவர் கே.முருகன், ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேது செல்வம், ஐஎன்டியூசி தலைவர் ரவிச்சந்திரன், இடதுசாரி கட்சியின் தலைவர்கள் ராஜாங்கம், பெரு மாள், தா.முருகன், விசுவநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேப்போல் புதுச்சேரி மத்திய பேருந்து நிலையம், இந்திரா காந்திசிலை, ராஜீவ்காந்தி சிலை, சேதராப்பட்டு, வில்லியனூர், பாகூர், அரியாங்குப்பம், மதகடிப்பட்டு, திருக்கனூர் ஆகிய மையங்களிலும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்கள் கைது
மத்திய அரசு மகாசம்மேளன அறைகூவலை ஏற்று புதுச்சேரி அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி முல்லைநகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளனத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மறைமலை அடிகள் சாலை யில் உள்ள மத்திய பேருந்து நிலையம் முன்பு சம்மேளன கவுரவத் தலைவர் பாலமோகனன் தலைமையில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட்டு கைதானர்கள்.
பிஎஸ்என்எல் ஊழியர்கள்
வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார்.

;