ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி அடுத்த வாரத்தில் புனேயில் உள்ள சசூன் மருத்துவமனையில் தொடங்கவுள்ளது.
"கோவிஷீல்ட்" தடுப்பூசியின் 3 ஆம் கட்டச் சோதனை துவங்க உள்ளது. இந்தச் சோதனையை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆ இந்தியா (எஸ்ஐஐ) ஏற்கனவே 200 தடுப்பூசிகளைத் தன்னார்வலர்களுக்கு வழங்கியுள்ளது. இந்த நிலையில் 3 ஆம் கட்டச் சோதனையைப் புனேயில் உள்ள சசூன் பொது அரசு மருத்துவமனையில் செய்யப்படுகிறது. சனிக்கிழமை முதல் மருத்துவமனையில் தன்னார்வலர்கள் சோதனைக்கு உட்படுத்தத் தொடங்கியது. மேலும் தடுப்பூசியைப் பெற விரும்புவார்கள் மருத்துவமனையைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, பாரதி வித்யாபீத் மருத்துவக் கல்லூரி மற்றும் நகரத்தில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையிலும் சோதனைகள் நடத்தப்படவுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி , சோதனைக்கான எஸ்ஐஐ பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. இம்மாதத் தொடக்கத்தில் எஸ்ஐஐ கொரோனா சோதனைகளை நிறுத்தியது.
நோயின் தன்மை அறியாமல் உள்ள காரணத்தால் அஸ்ட்ராஜெனெகா மற்ற நாடுகளில் சோதனைகளை நிறுத்திய நிலையில், அடுத்த கட்டத் தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டப் பரிசோதனைகளை நிறுத்து வைக்க வேண்டும் என இந்திய மருத்துவக் கட்டுப்பாட்டு ஜெனரல் செப்டம்பர் 11 அன்று கூறியிருந்தார். இருப்பினும் , செப்டம்பர் 15 ஆம் தேதி டி.சி.ஜி.ஐ தடுப்பூசியின் மருத்துவப் பரிசோதனையை மீண்டும் துவங்க எஸ்ஐஐக்கு அனுமதி அளித்துள்ளது.