தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இணைய திரைப்படங்கள், செய்திகள், பிற உள்ளடக்கங்களை கொண்டு வருவதற்கான புதிய உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இணைய திரைப்படங்கள், ஆடியோ காட்சிகள், இணைய செய்திகள் மற்றும் பிற உள்ளடக்கங்களை கொண்டு வருவதற்கான உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அமைச்சரவை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, அரசியலமைப்பின் 77 ஆவது பிரிவின் 3 ஆவது பிரிவினால் வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி, ஜனாதிபதி இந்திய அரசின் வணிக ஒதுக்கீட்டுக்கான விதிகள் 1961 ஐ திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதில் இந்திய அரசு வணிக ஒதுக்கீட்டுக்கான 300 மற்றும் 57 ஆவது திருத்த விதிகள் 2020 என இதனை அழைக்கலாம். அவை ஒரே நேரத்தில் நடைமுறைக்கு வரும். இந்திய அரசு வணிக ஒதுக்கீடு விதிகள், 1961 ல், இரண்டாவது அட்டவணையில் 'தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (சூச்சனா அவுர் பிரசரன் மந்திராலயா) என்ற தலைப்பில் உட்பிரிவு 22க்குப் பிறகு, ஆன்லைன் உள்ளடக்க பதிவேற்றம் செய்யும், திரைப்படங்கள் மற்றும் ஆடியோ-வீடியோ கோப்புகள் , இணைய தளங்களில் செய்திகள், நடப்பு விவகாரங்கள், பிற உள்ளடக்கங்கள் அனைத்தும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்படும், என திருத்தல் செய்து சேர்க்கப்பட்டுள்ளது.