tamilnadu

img

கொரோனா தோற்றால் ஒடிசாவில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு 30 சதவீதமாக பாடத்திட்டம் குறைப்பு

புதுடில்லி

கொரோனா தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளன என ஒடிசா பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒடிசா பள்ளி மற்றும் வெகுஜன கல்வித் துறை 1 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தை 30 சதவீதமாக குறைத்துள்ளது. இதனை மூன்று குழுக்கள் ஆய்வு செய்த ஒப்புதலுடன் பாடத்திட்டத்தை குறைப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இருப்பினும் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய குறிப்பிட்ட முக்கியமான பாடத்திட்டங்களை விளக்கவில்லை.

இது குறித்து ஒடிசா பள்ளி மற்றும் வெகுஜன கல்வித் துறை சார்பில் ட்விட்டரில் இதனை அறிவித்துள்ளது. அதில், ஒடிசாவின் கல்வி பாடத்திட்டமானது 30 சதவீதமாக குறைக்கப்பட்டது என கல்வித்துறை அமைச்சர் ஸ்ரீ சமீர் ரஞ்சன் டாஷ் தெரிவித்துள்ளார்.

புதிய ஒடிசா பாடத்திட்டம் அந்தந்த இடைநிலைக் கல்வி வாரியம் ஒடிசா (பி.எஸ்.இ), உயர்நிலைக் கல்வி கவுன்சில் ஒடிசா (சி.எஸ்.எஸ்.இ) மற்றும் ஆசிரியர் கல்வி இயக்குநரகம் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (எஸ்.சி.இ.ஆர்.டி) ஆகியவற்றின் இணையதளங்களில் கிடைக்கும்.

கொரோனா உருவாக்கிய தற்போதைய சூழ்நிலையை அடுத்து, 2020-21 ஆம் ஆண்டு கல்வி அமர்வுக்கு 9 முதல் 12 வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை ஜூலை மாத தொடக்கத்தில் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) திருத்துயுள்ளது. சிபிஎஸ்இ க்குப் பிறகு, ராஜஸ்தான், குஜராத், ஹரியானா, பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் கோவாவின் மாநில கல்வி வாரியங்களும் பள்ளி பாடத்திட்டங்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது.

;