tamilnadu

img

புதுச்சேரியில் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு

புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணராமி அறிவித்துள்ளார். 

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகி உள்ளனர். நோய் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் நாளை காலை 7 மணி முதல் இரவு  9 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுச்சேரியில், நாளை முதல் மார்ச் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணராமி அறிவித்துள்ளார். மேலும், அத்தியாவசிய பொருட்களை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த கேரளாவுக்கு அருகில் உள்ள மாஹேவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.