புதுச்சேரி, ஜூலை 16- பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவையை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி புதுச்சேரி தலைமை பொது மேலாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழி யர்கள் அதிகாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப் பாளர்கள் கொளஞ்சியப்பன், தங்கமணி ஆகியோர் கூட்டாக தலைமை தாங்கினர். இதில் பங்கேற்ற ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கையில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல் வேலூர் பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் எம்ப்ளா யீஸ் யூனியன் மாவட்ட செயலாளர் தங்க வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. எஸ்என்இஏ அணி மாவட்ட செய லாளர் செயலாளர் சபியுல்லா, என்எப்டிஇ மாவட்டச் செயலாளர் அல்லிராஜா, ஏஐபி எஸ்என்எல்இஏ மாவட்ட செயலாளர் குரு பிர சாத் கலந்து கொண்டனர். நிறுவனத்தை புத்தாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் பிரதி மாதம் ஊதியம் வழங்க வேண்டும், ஒப் பந்த ஊழியர்களுக்கு நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.