tamilnadu

img

பிரதமர் மோடி புதுச்சேரி வருகையால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட மக்கள்.....

புதுச்சேரி:
பிரதமர் வந்து செல்லும் வரை புதுச்சேரி மக்கள் வீட்டு சிறையில் வைக்கப்பட்டனர்.ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறுதிட்டங்களை துவக்கி வைப்பதற்கு வியாழனன்று பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வந்தார்.  பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம், பாஜக  சார்பில் லாஸ்பேட்டை விமானத் தளம் அருகில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் 11:30 மணிக்கு புதுச்சேரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி முதலில் ஜிப்மர் மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று , பின்னர் 12.30 மணிக்கு லாஸ்பேட்டை விமானத்தளம் அருகில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

பணம் கொடுத்து ஆட்களை திரட்டிய பாஜக
பிற்பகல் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு காலை எட்டு மணிக்கே  பாஜகவினர்பணம் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து பந்தலில் அமரவைத்தனர்.  அவர்களுக்கு குடிநீர் வசதி கூட ஏற்பாடு செய்யவில்லை. பல்வேறு சிரமத்திற்கு  ஆளான அந்த நபர்கள் மோடி வருவதற்கு முன்பே பொதுக்கூட்ட திடலைவிட்டுவெளியேறினர்.  அப்போது ஒரு கட்டத்தில்கட்சி நிர்வாகிகள், காவல்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்தி, கூட்டத்திடலில் இருந்து ஆட்கள் வெளியேறுவதை  தடுத்தனர். ஒருசில உயரதிகாரிகள் பொதுமக்களை உள்ளே இருக்கைகளில் அழைத்து வந்து அமர வைத்தனர். இருந்தாலும் பொதுமக்கள் அதனையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக வெளியேறிசென்றனர். பிரதமர் பேசும்போது கட்சி நிர்வாகிகளை தவிர பொதுமக்கள் கூட்டமின்றி காணப்பட்டது.

பள்ளிகளுக்கு விடுமுறை
பிரதமர் வருகையை ஒட்டி புதுச்சேரி  துணைநிலை ஆளுநர்   தமிழிசை சவுந்தரராஜனின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளை கட்டாயப்படுத்தி பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்தனர். அதேபோல் விழா நடைபெறும் ஜிப்மர்மருத்துவமனைக்கும்  லாஸ்பேட்டைவிமானதளத்திற்கும் இடையே இரண்டு கிலோ மீட்டர் தூரம் மட்டுமே உள்ளது.ஆனால் ஆளுநரின் உத்தரவின்பேரில்  புதுச்சேரி முழுவதும் போக்குவரத்தை மாற்றம் செய்து பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தினர். லாஸ்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, காமராஜர் நகர் ஆகிய தொகுதிகளில் மக்கள் உட்பட ஒட்டுமொத்தத்தில் புதுச்சேரி மக்கள் பிரதமர் மோடி வந்து செல்லும் வரை வீட்டுச் சிறையில்  வைக்கப்பட்டிருந்தது போன்று அடைக்கப்பட்டிருந்தனர். 

மோடிக்கு எதிர்ப்பு
புதுச்சேரி மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் - திமுக அரசை கவிழ்த்துஅரசியல் படுகொலை செய்துள்ள மத்தியபாஜக அரசை கண்டிக்கும் வகையில் பல்வேறு ஜனநாயக அமைப்புகள் சார்பில் புதுச்சேரி வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து  கருப்பு பலூன்  பறக்கவிட்டு கண்டனம் தெரிவித்தனர்.

;