புதுச்சேரி,மே.9-புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான அருண் செய்தியாளர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி மக்களவை தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட வெங்கட்டா நகர் மின்துறை கட்டிடத்தில் அமைந்துள்ள 10 ஆம் எண் வாக்குச்சாவடியில் நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வாக்குச் சாவடிக்கு மறு வாக்குப் பதிவு மே 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இந்த வாக்குச் சாவடியில் மொத்தம் 952 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்கு வாக்காளர்கள் தங்களது மறு வாக்குகளைப் பதிவு செய்ய வேண்டும். இதற்கான நடவடிக்கையை மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகம் செய்து வருகிறது. இந்த வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவின் போது பொறுப்பிலிருந்த அதிகாரி பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இந்த வாக்குச் சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று மதச் சார்பற்ற கட்சிகளின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கதாகும்.