tamilnadu

img

புதுச்சேரிக்கு செய்யும் அநீதியை இந்தியாவுக்கும் செய்கிறது மோடி அரசு.... ராகுல்காந்தி சாடல்...

புதுச்சேரி:
புதுச்சேரிக்கு செய்யும் அநீதியை இந்தியாவுக்கும் செய்கிறது மோடி அரசுஎன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கடுமையாகச் சாடியுள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியதுணைத்தலைவர் ராகுல் காந்தி எம்.பி., பிப்ரவரி 17 புதன்கிழமையன்று புதுச்சேரிக்கு வந்தார்.மாலையில் ஏ எஃப்டி திடலில் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்ட த்தில் ராகுல் காந்தி பேசியதாவது :  

பல நாடுகளில் ஒரே மதம், ஒரேமொழி, கலாச்சாரம் உள்ளது. இந்தியாவின் வலிமை அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதில் உள்ளது. புதுச்சேரிசிறிய மாநிலமாக இருந்தாலும் இந்தியாவின் பெரிய மாநிலத்துக்கு இணையான முக்கியத்துவம் உண்டு. அதற்கு ஒரு காரணம் உள்ளது. காங்கிரஸ் உங்கள் கலாச்சாரம், பண்பாடு, உரிமைகளை பாதுகாக்கும். புதுச்சேரி மக்களை நாங்கள் மனமாரநேசிக்கிறோம். புதுச்சேரி இந்தியாவில் உள்ளது என்றால் இந்தியாவும் புதுச்சேரியில் உள்ளது. இது ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள மரியாதை யால் அமைகிறது. புதுச்சேரி ஒருவருக்கு தனிப்பட்ட சொத்து அல்ல. புதுச்சேரி எனது சொந்த சொத்து எனநினைப்போர் விரைவில் ஏமாந்து போவார்கள்.

புதுச்சேரி சிறிய பகுதி,  அதிக மக்கள் இல்லை என நினைத்தால்,இந்திய மக்களின் உண்மையான உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என அர்த்தம்.  கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் மோடி புதுச்சேரி அரசை செயல்பட விடவில்லை.  வாக்களித்த மக்களை தனிப்பட்ட முறையில் பிரதமர் அவமதித்தார். துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மூலம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாக்கையும் மதிக்கமாட்டேன் என கூறினார்.மோடியை பொறுத்தவரை அவர் பிரதமராக இருக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணம். உங்கள் கனவு, ஆசைகள், கடின உழைப்பை கருத்தில்கொள்ளவில்லை. நாட்டின் சக்கரவர்த்தி என  மோடி நினைக்கிறார். பிரதமராக செயல்படவில்லை. அவர் புதுச்சேரி மக்கள் எண்ணத்தை மதிக்க வேண்டும். நிதி ஆதாரத்தை தர வேண்டும். எதுவும் மோடி தரவில்லை. கடந்த முறை நீங்கள் வாக்களித்ததை அவமதித்த பிரதமரை பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

உங்கள் கடந்த காலத்தை அவமதித்தவர், நிச்சயமாக எதிர்காலத்தை யும் அவமதிப்பார். எங்களுக்கு தரும் வாக்கானது உங்கள் கனவுகளை, எண்ணங்களை செயல்திட்டமாக உருவாக்கித்தரும். இது தேர்தல் போட்டியாக நினைக்கவில்லை. இது புதுச்சேரியின் ஆன்மாவுக்கு நடத்தப்படும் தர்மயுத்தம். இந்த யுத்தம் நீங்கள் எப்படி வாழ விரும்புகிறீர்களோ, அப்படிவாழ விரும்பும் உரிமையை பெற்றுத்தரும் யுத்தம். புதுச்சேரிக்கு என்ன அநீதி செய்கிறார்களோ அதையே இந்தியா
வுக்கும் செய்கின்றனர். தமிழகத்தில் தமிழ் பேசக்’கடாது என்கின்றனர். பஞ்சாப்பில் தீவிரவாதிககள் என்கின்றனர்.  அரசை விமர்சித்தால் தேச விரோதி என்கின்றனர்.மூன்று வேளாண் சட்டங்களை கொண்டுவந்து விவசாயிகளை சித்ரவதை செய்கிறார். 3 சட்டங்களின் நோக்கம் கோடிக்கணக்கான விவசாயிகளின் எதிர்காலத்தை பறித்து சில பணக்காரர்களிடம் கொடுப்பதே ஆகும்.  இந்த சட்டம் வரும்போது விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் நிறுவனத்தினர் தெருவுக்கு வருவதை தவிர வேறு வழியில்லை. ஏழை மக்கள் உணவுக்கு, உணவுப்பொருளுக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காது. இதுதான் எதிர்காலத்தில் நடக்கும்.உங்கள் வாக்கு உங்கள் எதிர்காலத்தை முடிவு செய்ய வேண்டும். எங்கிருந்தோ வந்த ஆளுநர் உங்கள் எதிர்காலத்தை நிர்ணயம் செய்யக்கூடாது.  புதுச்சேரி மக்களின் எதிர் காலத்தை மக்களால் தேர்வாகும் பிரதிநிதிகள்தான் முடிவு செய்ய வேண்டும். புதுவையின் எதிர்காலத்தைகெடுக்கும் முயற்சியை மத்திய அரசுகைவிட வேண்டும். புதுச்சேரி  கலாச் சாரத்தை பண்பாடை பாதுகாக்க நான் போராடுவது எனக்கு பெருமை. இந்தியாவில் ஆட்சிக்கு வந்தால் எதிர்காலத்தை களவாட அனுமதிக்கமாட் டோம். இவ்வாறு அவர் பேசினார்.

;