புதுச்சேரி, நவ. 1- புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி எம்எல்ஏ வாக காங்கிரஸ் கட்சி யின் ஜான்குமார் பதவி யேற்றுக்கொண்டார். தமிழகத்தின் விக்கிர வாண்டி, நாங்குனேரி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய பேரவைத் தொகுதி களுக்கு நடந்த இடைத்தேர்த லில் விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் இடைத்தேர்த லில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றிபெற்றார். இந்நிலையில், புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் ஜான்குமார் வெள்ளிக்கிழமை பதவி யேற்றுக்கொண்டார். புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் ஜான்குமாருக்கு சபாநாய கர் சிவக்கொழுந்து பதவிப் பிரமாணம் செய்து வைத் தார். இந்த பதவியேற்பு விழாவில் முதல்வர் நாரா யணசாமி மற்றும் அமைச் சர்கள் கலந்து கொண்டனர்.