tamilnadu

புதுவை அரசை கண்டித்து தர்ணா: மின்துறை ஊழியர்கள் முடிவு

புதுச்சேரி, அக்.6- மின் துறை தனியார் மைய ஒப்பந்த புள்ளியை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக் குழு புதுச்சேரி அரசை வலி யுறுத்தியுள்ளது. புதுச்சேரி மின்துறை தனியார்மய கார்ப்பரேஷன் எதிர்ப்பு கூட்டு நட வடிக்கை குழு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் பிரேம தாசன் தலைமையில் நடை பெற்றது. ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியூசி, ஏஐ சிசிடியு, எல்எல்எப், அரசு ஊழியர் சம்மேளன   நிர்வாகி கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மின் துறை தனியார்மய படுத்தும் முடிவை,மக்கள் நலனை கருத்தில் கொண்டு கை விடுவதற்கு முடிவு செய்யாமல், 100 விழுக்காடு பங்குகளை விற்பதா? அல்லது 49:51 என்ற விழுக்காடு அடிப்படையில் விற்பதா? என்ற வகையில் பேச்சுவார்த்தையை திசை திருப்பப்பட்டுள்ளது. இது, புதுச்சேரி  மக்களுக்கு இழைக்கும் துரோகம். இதனை கூட்டு நடவடிக்கை குழு வன்மையக கண்டிக் கிறது. தனியார் மைய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்திஅக்.13 அன்று புதுச்சேரி அண்ணா சிலை எதிரே தர்ணா போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

;