tamilnadu

img

பட்ஜெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய அல்வா வழங்கும் போராட்டம்!

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அல்வா கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்கள் விரோத, இளைஞர் விரோத ஒன்றிய பாஜக அரசின் கார்ப்ரேட் ஆதரவு பட்ஜெட்டை கண்டித்தும், மின்துறையை தனியாரிடம் தாரைவார்க்க துடிக்கும் என். ஆர் காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் அல்வா வழங்கும் போராட்டம் புதுச்சேரியில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில்,இளைஞர்கள் வேலைவாய்ப்புகள் குறித்து அறிவிப்புகள் வெளியிடாததை கண்டித்தும், கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பட்ஜெட்டை தாக்கல் செய்த ஒன்றிய அரசிற்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார், பிரதேச பொருளாளர் சஞ்சய் முன்னிலை வகித்தார், பிரதேச செயலாளர் ஆனந்த் கண்டன உரையாற்றினார். இதில் நிர்வாகிகள் ரஞ்சித், பிரதாப், நவீன், நிலவழகன், கெளசிகன், ராஜ்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

;