tamilnadu

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

 புதுக்கோட்டை, மார்ச்.7-  புதுக்கோட்டை ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2020-ம் ஆண்டிற் கான ‘தமிழ்ச் செம்மல் விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.  விண்ணப்பப்படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.cHm என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தினை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 20-ந் தேதிக்குள் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலு வலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.