tamilnadu

உலக சுற்றுச்சூழல் தினம்

புதுக்கோட்டை, ஜூன் 7- புதுக்கோட்டையில் சனிக்கிழமை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம், நேரு யுவகேந்திரா, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய உலக சுற்றுச்சூழல் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமையில் வகித்தார். மாவட்ட நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் எஸ்.ஜெயஸ்ரீ, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பா ளர் ஆர்.ராஜ் குமார், நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஜோயல் பிரபாகர், கணக்காளர் ஆர்.நமச்சிவா யம், அறிவியல் இயக்க மாநில செயற் குழு உறுப்பினர்கள் லெ.பிரபாகரன், அ. மணவாளன், மாநில பொதுக்குழு உறுப்பி னர் எம்.வீரமுத்து சி.சிவக்குமார் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  

அறிவியல் இயக்க அலுவலகத்தின் வளாகத்திற்குள்ளும் எதிரே உள்ள சாலை ஓரங்களிலும் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. ‘சர்வதேச சுற்றுச் சூழல் அச்சுறுத்தல்கள்’ எனும் தலைப்பில் வீடியோ கான்பரன்சிங் முறை யில் அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் பொ.ராஜ மாணிக்கம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆரா ய்ச்சி நிறுவன மாவட்ட திட்ட ஒருங்கி ணைப்பாளர் முனைவர் ஆர்.ராஜ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். அறி வியல் பிரச்சார மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் எம்.சிவானந்தம் ஒருங்கிணைத்தார். முன்னதாக அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் மு.முத்துக்குமார் வரவேற்க, மாவட்ட இணைச் செயலாளர் டி.விமலா நன்றி கூறினார்.