புதுக்கோட்டை, ஆக.19- 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை விரை ந்து பேசி முடிக்க வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிலா ளர்கள் சிஐடியு தலைமையில் திங்கள்கிழமையன்று புதுக்கோட்டையில் வாயிற்கூட்டம் நடத்தினர். அரசுப் போக்குவரத்துக்கழக புதுக்கோட்டை மண்டல அலுவலகம் முன்பாக நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சிஐ டியு சங்கத்தின் மண்டலத் தலைவர் கே.கார்த்திக்கேயன் தலைமை வகித்தார். கோரிக்கையை விளக்கி சிஐடியு மாவட்ட தலைவர் க.முகமதலிஜின்னா, செயலாளர் ஏ.ஸ்ரீதர், போக்குவரத்து சங்க மண்டலப் பொதுச் செயலா ளர் எஸ்.பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர் க. செல்வராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.மணிமாறன், எஸ். சாமிஅய்யா, ஏ.செல்வராஜ், டி.சந்தானம், எஸ்.இளங்கோ வன், என்.மெய்யராம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக நகரக் கிளைத் தலைவர் ஏ.பால்ராஜ் வரவேற்க, செயலா ளர் எஸ்.செந்தில்குமார் நன்றி கூறினார். கூட்டத்தில் ஏரா ளமான போக்குவரத்துத் தொழிலாளர்கள் பங்கேற்றனர்