tamilnadu

img

கொரோனாவை விட தீவிரமடையும் தீண்டாமைக் கொடுமைகள்

புதுக்கோட்டை, மே 25- கொரோனா தாக்கத்தைவிட புதுக் கோட்டை மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமைகள் தீவிரமடைந்துள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இதுகுறித்து கட்சி யின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த கொரோனா நோய்த்தொற்று தற் பொழுது தீவிரமடைந்து வருகிறது. அதேநேரத்தில் கரோனாவைவிட மாவட்டத்தில் குற்றச்செயல்களும், தீண்டாமைக் கொடுமைகளும் மக்களை மேலும் பதற்றத்தில் ஆழ்த்தி உள்ளன. அரசு மூடிக் கிடந்த டாஸ் மாக் கடைகளைத் திறந்து விட்ட பிறகு வாகன விபத்துக்களும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தலைவிரித்தாடத் தொடங்கி உள்ளன.  

கந்தர்வகோட்டை தாலுகா நொடியூர் கிராமத்தில் எட்டாம் வகுப்பு சிறுமி உடலில் பல்வேறு காயங்களுடன் கொடூரமான சித்தர வதைக்கு உள்ளாக்கப்பட்டு பலியாகி உள்ளார். குற்றவாளிகளை உடனடி யாக கண்டுபிடிக்க வலியுறுத்தி எங்கள் கட்சியின் சார்பிலும், ஜன நாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பிலும் போராட்டம் நடத்தியும் இதுநாள் வரை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை. மாவட்ட நிர்வாகம் உட னடியாக குற்றவாளிகளை கைது செய்து வேண்டும். உரிய தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

தீண்டாமைக் கொடுமை
சாதி, மதம், ஏழை, பணக்காரன் என பாகுபாடின்றி அனைத்துதரப்பு மக்களையும் கொரோனா மரண பீதியில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாதி ஆதிக்க வெறியர்களின்; தீண்டாமை வன்செயல்கள் அதைவிட கூடுதல் பயத்தை தலித் மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.  கறம்பக்குடி தாலுகா கன்னி யான்கொல்லையில் தலித்துகள் வசிக்கும் பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாலும், பள்ளி குழந்தைகளின் பாது காப்பைக் கருதியும் கிராம மக்கள் ரோட்டின் குறுக்கே வேகத்தடை அமைத்துள்ளனர். இதைப் பொ றுத்துக்கொள்ள முடியாத அதே ஊரைச் சேர்ந்த சில சாதி வெறி யர்கள் வேகத்தடையை அப்புறப் படுத்தியுள்ளனர்.

இதைத் தட்டிக் கேட்ட தலித் இளைஞர்கள் மீது கெலைவெறித் தாக்குதலை நடத்தியுள்ளனர். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப் பட்டள்ளனர். தற்பொழுது அவர்கள் தனியார் மருத்துவமனiயில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையினரோ இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு செய்து சாதி வெறி யர்களை காப்பாற்றும் நடவடிக்கை யில் ஈடுபட்டுள்ளனர். இது சாதிய வன்மத்துடன் செயல்படுபவர்க ளுக்கு ஊக்கத்தையும் தெம்பையும் தரும் நடவடிக்கையாகும்.

நேரில் ஆய்வு
பாதிக்கப்பட்ட கன்னியாங் கொல்லை கிராமத்தில் உள்ள தலித் மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலளர் எஸ். கவிவர்மன், செயற்குழு உறுப்பி னர்கள் க.செல்வராஜ், எஸ்.பொன்னுச்சாமி, வி.துரைச்சந்திரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் சி.அன்புமண வாளன், மாநிலக்குழு உறுப்பினர் சி. ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எம்.பாலசுந்தர மூர்த்தி, த.அன்பழகன், ஒன்றியக்குழு உறுப்பினர் துரை.அரிபாஸ்கர் உள்ளிட்டோர் சந்தித்து நடந்துள்ள விபரங்களைக் கேட்டறிந்தனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தி னருக்கும் ஆறுதல் கூறினர்.

ஆட்சியரிடம் கோரிக்கை
மேலும், நடந்துள்ள சம்பவங்க ளை நேரில் விளக்கியதோடு கோ ரிக்கை மனுவையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள் ளோம். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் நடந்துள்ள சம்பவங்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும். உண்மைக் குற்றவாளி களை நிச்சயம் தண்டிக்கப்படு வார்கள் எனத் தெரிவித்துள்ளார். ஆட்சியர் உறுதியளித்தபடி குற்ற வாளிகள் விரைவில் தண்டிக்கப்படு வர் என நம்புகிறோம். தவறும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட மக்களைத் திரட்டி போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு  அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.