tamilnadu

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

திருவாரூர், ஜூன் 6- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தாளாளர் தலைமையில் மரக்கன்று நடுதல் விழா நடைபெற்றது. உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் மரக்கன்று நட்டார். நுகர்வோர் மையத்தின் துணைத் தலைவர்கள் பி.அழகிரி சாமி, வே.மஞ்சுளா, பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ், இணைச் செயலாளர் என்.காளிமுத்து, திட்ட ஆலோசகர் சரவணன், சுற்றுசூழல் இயக்குநர் தர்மதாஸ், பயிற்சி இயக்குநர் செல்வகுமார் கலந்து கொண்டனர்.  மேலும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், நகராட்சியுடன் இணைந்து திருவாரூர் கமலாலயம் குளத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கும் பணி அமைப்பின் துணைத்தலைவர் பி.அழகிரி சாமி தலைமையில் நடைபெற்றது.  நகராட்சி ஆணையர், சுகாதார ஆய்வாளர் ராமச்சந்திரன்,  இணைச் செயாலாளர் என்.காளிமுத்து முன்னிலை வகித்தனர். மையத்தின் பொதுச்செயலாளர் ஆர்.ரமேஷ், சட்ட இயக்குநர் பூரண விஜய பூபாலன், சுற்றுசூழல் இயக்குநர் தர்மதாஸ், பயிற்சி இயக்குநர் செல்வகுமார் கலந்து கொண்டனர்.