tamilnadu

img

சாக்லெட்டிற்கு பதில் மரக்கன்று  

 அறந்தாங்கி: புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்த மரம் தங்ககண்ணன் மகன் தமிழழகன். சேந்தன்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவர் தனது ஒவ்வொரு பிறந்த நாளை கொண்டாடும் போது சக மாணவர்களுக்கு வழக்கமான சாக்லெட், இனிப்புகளை கொடுப்பதில்லை மாறாக ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரக்கன்று கொடுத்து வருகிறார். வெள்ளி அன்று மாணவரின்  13 வது பிறந்தநாளை முன்னிட்டு சுமார் 250 பல வகையான மரக்கன்றுகளை சக மாணவ மாணவிகளுக்கு பிறந்த நாள் பரி சாக வழங்கினார். அவரது தாத்தா மரம் தங்கசாமி தமிழ்நாடு முழுவதும் சென்று மரக்கன்றுகளை நட்டு வளர்க்க விழிப்பு ணர்வை ஏற்படுத்தினார் கடந்த சில வருடங்களாக அவரது தந்தை கண்ணன் மரக்கன்றுகளை நட்டு வருகிறார். ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் சக மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுக ளையே இனிப்பாக வழங்கி வருகிறான். அதே போல அவரது தங்கை பிறந்த நாளுக்கும் மரக்கன்றுகள் தான் இனிப்பு.பிறந்த நாளில் சக மாணவர்களுக்கு மரக்கன்றுகள், விதைப்பந்து கள் வழங்கி கொண்டாடினால் விரைவில் தமிழ்நாடு மரங்கள் அடர்ந்த மரங்கள் நிறைந்த மாநிலமாக மாற்ற முடியும் என்று மாணவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

;