அறந்தாங்கி, மே 23- புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட இஸ்லாமிய கலாச்சார பேரவை சார்பில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வீடு வீடாக சென்று பித்ரா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரவை மாவட்ட செயலாளர் அப்துல் ஹமீது தலைமை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி, மாவட்ட துணைச் செயலாளர் அஜ்மீர் அலி பித்ரா வழங்கினர். சுமார் 1,25,000 ரூபாய் மதிப்பிலான 2 டன் அரிசி நகர மாணவரணி செயலாளர் சேக் பரீத் மற்றும் தொண்டரணிச் செயலாளர் கலந்தர் மைதீன் ஆகியோர் வீடு வீடாக கொண்டு சேர்த்தனர். நகர பொருளாளர் அப்துல் கரீம், நகர செயலாளர் ஜகுபர் சாதிக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.