புதுக்கோட்டை, ஆக.11- தேசிய கல்விக்கொ ள்கை மற்றும் சுற்றுச்சூழல் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வாலிபர் சங்க த்தின் நகரக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகரத் தலைவர் எஸ்.விக்கி தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் துரை. நாராயணன், துணை தலை வர் பி.அருண், நகர செயலா ளர் பாபு, பொருளாளர் டேவிட் உள்ளிட்டோர் பேசினர்.