tamilnadu

மணல் கடத்தல் லாரி மோதி ஒருவர் பலி

பொன்னமராவதி, ஆக.20- பொன்னமராவதி ஒன்றியம் கீழத்தா னியம் அருகே அம்மாபட்டியில் அனுமதி யின்றி மணல் ஏற்றி சென்ற மினி டிப்பர் லாரி யை பொன்னமராவதி வட்டாட்சியர் திரு நாவுக்கரசு தலைமையிலான அலுவலர் கள் பறிமுதல் செய்தனர். ஓட்டுநர் தப்பிய நிலையில் காரையூர் காவல் நிலையத் திற்கு லாரியை கொண்டு செல்ல உத்தர விட்டார்.  முள்ளிப்பட்டியை சேர்ந்த ஊர்காவல் படை சரவணன் என்பவர் வாகனத்தை எடுத்துச் செல்லும் போது கீழத்தானியம் ராமலிங்கபுரம் பேருந்து நிறுத்தம் அருகே எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. தொடர்ந்து சாலையில் நடந்து சென்ற அப்பகுதியை சேர்ந்த கே.அழகு (55) என்பவர் மீதும் லாரி மோதியது. இதில் அழகு அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.  மோட்டார் சைக்கிளில் சென்ற ராம லிங்கபுரத்தைச் சேர்ந்த தங்கவேலு (65) படுகாயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டார். லாரியை ஓட்டி வந்த சரவணன், மது போதையில் இருந்ததாகவும், அவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி யும், இறந்தவர் உடலை சாலையில் வைத்து  பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதையறிந்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் பாலாஜிசரவணன், இலுப்பூர் கோட்டாட்சியர் டெய்சிக்குமார் ஆகி யோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மறியல் கை விடப்பட்டது. விபத்து குறித்து காரையூர் காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

;