tamilnadu

img

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா நிறைவு புத்தக விற்பனை ஒரு கோடி ரூபாயைத் தாண்டியது

புதுக்கோட்டை, பிப்.23- பத்து நாட்களாக நடைபெற்று வந்த நான்காவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை ஒரு கோடி ரூபாயயைத் தாண்டிய விற்ப னையுடன் நிறைவுற்றது. புத்தகத் திரு விழா ஒருங்கிணைப்பாளர்கள் நா. முத்துநிலவன், அ.மணவாளன், லெ. பிரபாகரன், ஆர்.ராஜ்குமார், எஸ்.டி. பாலகிருஷ்ணன், ம.வீரமுத்து, க.சதா சிவம், மு.முத்துக்குமார், ஆகியோர் அறிவித்தது:  தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் நான்காவது புதுக்கோட்டை புத்த கத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் பிப்ரவரி 14 அன்று தொடங்கி 23-ஆம் தேதி வரை நடை பெற்றது. 60-க்கும் மேற்பட்ட அரங்கு களில் 50-க்கும் மேற்பட்ட பதிப்ப கங்கள் தங்கள் புத்தகங்களை விற்ப னைக்காக வைத்திருந்தனர். முதலா மாண்டு புத்தக விற்பனை ரூ.50 லட்ச மாக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்பொழுது நான்காவது புத்தகத் திருவிழாவில் ஒரு கோடி ரூபாயாக விற்பனை உயர்ந்துள்ளது.
50 ஆயிரம் பேர் பங்கேற்பு
பத்து நாட்களும் நடைபெற்ற புத்த கத் திருவிழாவில் சராசரியாக 5 ஆயி ரம் பேர்வீதம் 50 ஆயிரம் பேர் பங் கேற்றுள்னர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் 10 ஆயிரத்திற் கும் அதிகமானோர் பங்கேற்றுள்ள னர். பத்து நாட்களும் பிரபலமான எழுத் தாளர்கள், கலைஞகர்கள், அறிவியல் அறிஞர்கள், திரைப்படப் பிரமுகர்கள் எனப் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.  மாவட்டம் முழுவதும் உள்ள 30-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாண வர்கள் புத்தகத் திருவிழாவில் தங்கள் கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி யுள்ளனர். நிறைவு நாளில் மக்கள் நல் வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் புத்தக அரங்குகளைப் பார்வையிட்டார். மேலும், புத்த கத்திருவிழாவை சிறப்பாக நடத்தி யமைக்காக விழா ஒருங்கிணைப்பா ளர்களை பாராட்டினார். நகராட்சி ஆணையர் ஜீவா.சுப்பிரமணியன், கம்பன் கழகச் செயலர் இரா.சம்பத் குமார் மற்றும் அறிவியல் இயக்க நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.  மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவிற்கு ஐடியா ப்ளஸ் சேர்மன் திருஷ்ணவரதராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினருமான சு.திரு நாவுக்கரசு, திரைப்பட இயக்குனர் ஆர்.பாண்டிராஜ் ஆகியோர் கவிதை, சிறுகதை போட்டிகளில் வெற்றி பெற்ற வர்கள் மற்றும் சிறந்த கவிதை, சிறு கதை, கட்டுரை நூல்களுக்கான விருது கள் பெற்றவர்களைப் பாராட்டி சிறப்பு ரையாற்றினர். அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ்.சுப்பிர மணி, அபெகா பண்டபாட்டு இயக்க நிறுவனர் மருத்துவர் நா.ஜெயராமன், கவிஞர் ராசி.பன்னீர்செல்வம் உள் ளிட்டோர் பேசினர். முன்னதாக கே. சர்பிரசாதம் வரவேற்க, துரை.நாரா யணன் நன்றி கூறினார்.

;