tamilnadu

img

நிவாரண உதவி வழங்கல்

அறந்தாங்கி: அறந்தாங்கி அருகே மன்னகுடியில் 140 ஏழை, எளிய குடும்பத்தினருக்கும், கொடிவயல் கிழக்கு பகுதியில் 100 குடும்பத்தினருக்கும் அரிசி மற்றும் காய்கறி பைகள், ஆலங்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி சண்முகநாதன், தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.கணேசன், மாவட்ட கவுன்சிலர் சரிதா மேகராஜ், சோமு. மன்னகுடி ஊராட்சி தலைவர் லதா ராஜா, கொடி வயல் ஊராட்சி தலைவர் வெண்ணிலா பாலமுருகன், இளைஞர் அணி செந்தில் உள்ளிட்டோர் வழங்கினர். இதே போல் பெருங்காடு பகுதியில் 100 குடும்பங்களுக்கு வெளிநாட்டு வாழ் இளைஞர்கள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள அரிசி,  மளிகை பொருட்கள், முகக் கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.