tamilnadu

குறைந்த வாடகையில் நெல் அறுவடை இயந்திரங்கள் பெறலாம்

புதுக்கோட்டை, ஜன.9- வேளாண்மைப் பொறி  யியல் துறையில் குறைந்த வாடகையில் நெல் அறு  வடை இயந்திரம் வழங்க ப்படுகிறது.  இதுகுறித்து புதுக்கோ ட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரி விக்கையில், வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நெ ற்கதிர் அறுவடை இயந்திரம் ஒரு மணிக்கு ரூ.875-க்கு வீல் டைப் மற்றும் ரூ.1,415-க்கு ரப்பர் டிராக் என்ற குறைந்த வாடகையில் நெல் அறுவடை பணிகளுக்கு வழங்கப்படுகின்றன.  தேவைப்படும் விவசா யிகள் வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் புதுக்கோட்டை அலுவலக தொலைபேசி எண்: 04322-221816 என்ற எண்ணிற்கும், உதவி செயற்பொறியாளர் புதுக்கோட்டை 9443264168, 9443405997 என்ற கைபேசி எண்ணிற்கும், உதவி செயற்பொறியாளர் அறந்தாங்கி  9442178763, 9443456682 என்ற கைபேசி எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அல்லது உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை, எண்: 1426 ஊ பண்டக சாலை வளாகம், திருச்சி ரோடு, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை மற்றும் உதவி செயற்பொறியாளர்  வேளாண் பொறியியல் துறை, நைனா முகம்மது கல்லூரி அருகில், இரா ஜேந்திரபுரம், அறந்தாங்கி என்ற முகவரியில் அணுகி பயனடையலாம் என்றார்.

;