tamilnadu

எதிர்க்கட்சித் தலைவர்களை காஷ்மீருக்குள் அனுமதிக்காதது கண்டனத்துக்குரியது சு.திருநாவுக்கரசர் எம்.பி பேட்டி

புதுக்கோட்டை, ஆக:25- ஜம்மு-காஷ்மீருக்குச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்களை அனுமதிக்காதது கடும் கண்டனத்துக்கு உரியது என்றார். திருச்சி மக்களவை உறுப்பினர் சு.திருநாவுக்கரசு. புதுக்கோட்டை யில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய விடாமல் தடுத்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை. கடும் கண்டனத்துக்குரியது. காஷ்மீர் விவகாரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரே நிலைப்பாட்டில் தான் உள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட விதம் தவறானது. பழிவாங்கும் நோக்கத்தோடு பா.ஜ.க., கைது நடவடிக்கையில் ஈடுபட்டாலும், அதற்கு ஒரு போதும் அஞ்சமாட்டோம்.  நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் சில மாற்றங்கள் செய்ததைப் பார்க்கும் போது பட்ஜெட்டில் தவறு உள்ளதை உணர்த்துகிறது. அவர் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது போதுமானதாக இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையை தனியார் மயமாக்கும் முயற்சி மற்றும் அரசு துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் திட்டம் கண்டனத்திற்குரியது என்றார். 

;