பொன்னமராவதி, பிப்.2- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலத்தானியம் ஊராட்சியில் 60 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டி டம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்து 20 கர்ப்பிணி தாய்மார்களுக்குமகப்பேறு சத்து ணவு பெட்டகம் வழங்கினார். தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து, கூட்டுறவு சங்க ஒன்றிய தலைவர் பழனி யாண்டி, காரையூர் வட்டார மருத்துவ அலுவலர் அருள்மணி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர் பிரியங்கா, ஊராட்சி தலைவர்கள் மேலத்தானியம் முருகேசன், எம்.உசிலம்பட்டி தலைவர் பழனிச்சாமி, முள்ளிப்பட்டி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது போன்ற அரசு விழாக் களில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதியை தொட ர்ந்து புறக்கணிப்பதாக திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த கட்சியினர் அதிருப்தி தெரிவித் துள்ளனர்.