tamilnadu

img

நீதிமன்றம் உத்தரவிட்டும் நடவடிக்கை இல்லை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

புதுக்கோட்டை, ஜூன் 24- நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த வர்கள் மீது நடவடிக்கை எடுக் காததைக் கண்டித்து ஒரே குடும் பத்தைச் சேர்ந்த 4 பேர் திங்கள்கிழமை புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆத்திப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் துரைராஜ். இவரது குடு ம்பத்தை அந்தப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் குணசேகரன் மற்றும் அவரது தரப்பினர் முன்விரோ தம் காரணமாக சமூக ரீதியாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்த தாகக் கூறப்படுகிறது. இதை யடுத்து துரைராஜ் தரப்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடரப் பட்டது. இதையடுத்து குண சேகரன் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு நீதி மன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், நீதிமன்றத்திற்கு சென்றதால் ஆத்திரமடைந்த குணசேகரன் தரப்பினர் துரை ராஜ் மற்றும் அவரது குடும்பத் தினரை ஆபாசமாகத் திட்டி கட்டையால் தாக்கப்பட்டதாக வும் கூறப்படுகிறது. இதை யடுத்து ஊரை விட்டு வெளி யேறிய துரைராஜ் மற்றும் அவ ரது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்கள் உடலில் மண் ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தனர். அவர்களை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து ஆட்சியரிடம் தங்கள் கோரிக்கை மனுக் களை அளிக்க துரைராஜ் குடும் பத்தினரை போலீசார் அழை த்துச் சென்றனர். இச்சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

;