tamilnadu

பொற்பனைக்கோட்டையில்... 1ம்பக்கத் தொடர்ச்சி

கழகத்தினரால் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு கடந்த 13 நாட்களாக தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் தலைமையிலான அகழ்வாய்வு குழுவினர் மூலம் நடந்தது. இதில் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட செங்கல் கட்டுமான நீர்த்தட கால்வாய் அமைப்பு அகழ்வாய்வு குழியில் வெளிப்பட்டு இருப்பது வெளிக்கொணரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகளில் வாழ்விடம் சார்ந்த ஒரே கட்டுமானமாக பொற்பனைக்கோட்டை இருப்பதை இந்த கட்டுமான அமைப்பு உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி நகர நாகரிகத்திற்கான முக்கிய குறியீடாக தொல்லியல் துறையினரால் பார்க்கப்படும் கால்வாய் அமைப்பு கிடைத்திருப்பது,பொற்பனைக்கோட்டையின் மீது சிறப்பு கவனத்தை திருப்பியுள்ளது.

கீழடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோட்டை மற்றும் அதுசார்ந்த வாழ்விடம் குறித்த எவ்வித ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக தஞ்சாவூர் வல்லம் பகுதியில் இருந்த சங்க காலக் கோட்டை முழுவதுமாக சிதைந்து விட்ட நிலையில் சங்ககால பாடல்களில் கூறப்பட்ட அனைத்து அவயங்களும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது இந்த அகழ்வாய்வின்முதல் கட்டத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் இடத்திற்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் அரண்மனை மேட்டுப் பகுதியில் மிகமுக்கியமான கட்டுமானங்கள் இருக்கும்வாய்ப்புள்ளது. தமிழர்களின் நிர்வாக அமைப்பைவெளிப்படுத்தும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் இருந்த போதிலும் அதனை உறுதிப்படுத்தும் ஒரு இடமாக பொற்பனைக் கோட்டை அமைந்துள்ளது.தொடர் ஆய்வுகள் மூலம்முக்கிய கட்டுமானங்கள் பழங்கால பொருட்கள் ஆயுதங்கள் இன்னும் பிற முக்கிய தொல்பொருட்கள் கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

;