tamilnadu

img

பொற்பனைக்கோட்டையில் சங்க காலத்து செங்கல் கட்டுமானம் தமிழரின் நாகரிகம் மீண்டும் மேலெழுகிறது....

புதுக்கோட்டை:
தமிழனின் தொன்மையான வரலாற்றை பறைசாற்றும் வகையில் புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் சங்ககாலத்து கட்டுமானம் கிடைத்துள்ளது தொல்லியல் ஆய்வாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்திலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையான பொற்பனைக்கோட்டையில் பல்வேறு தொல்லியல் தடயங்கள் கிடைத்து வந்தன.2005 ஆம் குடவாயில் பாலசுப்பிரமணி யம் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வின் மூலமாக சங்ககால செங்கல் மற்றும் பானைஓடுகள் இருப்பதை உலகிற்கு வெளிப் படுத்தினார்.அதனைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கடல் சார் தொல்லியல் துறை பேராசிரியர்  சு. ராஜவேலு மற்றும் தமிழ் பல்கலைக்கழக அந்நாளைய மாணவர்கள் தங்கதுரை, பாண்டியன் ஆகியோரால் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு முதல் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின்ஆ.மணிகண்டன், கரு.ராசேந்திரன்  உள்ளிட்ட குழுவினர் பொற்பனைக் கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக மேலாய்வு செய்ததைத் தொடர்ந்து இரும்பு உருக்கு தொழிற்சாலை, இரும்பு உருக்கு கழிவுகள், சுடுமண் குழாய்கள், உருக்குக் கலன்கள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டன.இதனைத் தொடர்ந்து கோட்டையின் மேற்பரப்பில் இருக்கும் கட்டுமானங்களில் கொத்தளங்கள் உள்ளிட்டவை இருப்பதை யும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  ஆய்வுக்கழகத்தினர் கண்டுபிடித்த நிலையில்,   அகழ்வாய்வு தொடங்கிய பிறகு  சுடுமண் கூரை ஓடுகள், மணிகள், இரும்புக்கருவிகள் இருப்பதை கண்டறிந்து அக ழ்வாய்வு இயக்குநர் பேரா. இனியனிடம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு

;