tamilnadu

img

பள்ளி ஆண்டு  விழா  

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டு விழா மற்றும் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கும் விழா ஊர் கமிட்டியாளர்கள் சார்பாக நடைபெற்றது.  பள்ளியின் ஸ்மார்ட் கிளாஸுக்கு தேவையான 1 லட்சம் மதிப்பிலான பொருட்களை ஊராட்சி தலைவர் லெட்சுமி முத்துக்காளை தலைமையில் பொதுமக்கள், ஊர் கமிட்டியாளர்கள்  மேளதாளத்துடன் சீர்வரிசையாக சுமந்து வந்தனர். தொடர்ந்து பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு தலைவர் பழனியாண்டி வாழ்த்துரை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரோசாரியோ, பொன்னமராவதி வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஆதிலெட்சுமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாச்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையா சிரியர் ரோஸ்லின் மல்லிகா உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் செந்தூர் பாண்டி வரவேற்புரை வழங்கினார். மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.