tamilnadu

புதுகையில் 1.14 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு ரூ.42.57 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்ககப் பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளது:  பள்ளிகளில் பயிலும் மாணவர்களின்; கல்வி வளர்ச்சிக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி, பாடப்புத்தகம், இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்ட 14 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற விலையில்லா கல்வி உபகர ணங்கள் வழங்குவதன் மூலம் மாணவர்கள் இடைநிற்றலின்றி சிறந்த முறையில் கல்வி கற்க வாய்ப்பாக அமைந்துள்ளது. குறிப்பாக அரசு சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா மிதி வண்டியின் மூலம் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் சிரமமுமின்றி சரியான நேரத்தில் பள்ளிக்கு செல்ல வசதியாக உள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நான்காண்டுகளில் பள்ளிகளில் பயிலும் 1,13,839 மாணவ, மாணவிகளுக்கு ரூ.42.57 கோடி செலவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. விலையில்லா கற்றல் உபகரணங்களால் மாணவர்கள் இடை நிற்றல் இன்றி கல்வி கற்று வருவதுடன், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து கல்வி கற்பவர்க ளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது எனத் தெரிவித்தார்.

;