அறந்தாங்கி, மே 10- புதுக்கோட்டை மாவட்டம் மன மேல்குடி ஒன்றியத்தில் ஒலி -ஒளி அமைப்பகம் 50க்கும் மேற்பட்ட கம்பெனிகள் இயங்கி வருகின்றன. இதில், 450 தொழிலாளர்கள் பணி யாற்றி வருகிறார்கள். தற்போது கொரோனா ஊரடங்கால் இப்பொ ழுது இவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக முடங்கி இருக்கிறது. திருவிழா, திருமணம், கோவில் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடை பெறாததால் இவர்கள் வேலை வாய்ப்பை இழந்து வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். இந்த தொழிலை நம்பி இருக்கும் இவர்க ளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரி டம் ஒலி- ஒளி பெருக்கி தொழிலாளர் கள் கோரிக்கை மனு அளித்தனர்.