புதுக்கோட்டை, ஜூலை 19- புதுக்கோட்டை திரு க்கோகர்ணம் ஸ்ரீ வெங்க டேஸ்வரா மெட்ரிக். மேல்நி லைப்பள்ளியில் காமராசர் பிறந்த தினத்தை முன்னிட்டு கல்வி நேரம் - யூடியுப் காணொலி துவக்க விழா நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலை மை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலை வர் த.ரவிச்சந்திரன் மாண வர்களுக்கான கல்விநேரம் யுடியுப் காணொலியை துவக்கி வைத்தார். இதுகுறித்து பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி கூறுகையில், “எங்கள் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல. தமிழகத்தின் எல்லாக் குழந்தைகளும் குறி ப்பாக அரசுப் பள்ளி மாண வர்களும் பாடங்களை எளி தில் படித்து பயன்பெறும் வகையில் முற்றிலும் இலவ சமாக, கட்டணமின்றி மாண வர்களின் நலனை மையமா கக் கொண்டு எங்கள் பள்ளி யும் ஆர்.ஏ. மீடியாவும் இணைந்து ‘கல்விநேரம்” என்ற யூடியுப் காணொ லியை ஞாயிறன்று முதல் துவ ங்கியுள்ளோம். இந்தக் காணொலிகளில் எல்.கே.ஜி முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து பாடங்களும் தொ டர்ந்து வழங்கப்படுகிறது என்றார். ஆர்.ஏ. மீடியா நிறுவனர் ஜி.ரமேஷ்பாபு, வழக்கறிஞர் எம்.செந்தில்குமார், பேரா சிரியர் எம்.கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்றார்.