tamilnadu

img

இளம் வயதிலேயே அறிவியல் மனப்பான்மையை வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்தில் சாதிக்கலாம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு

புதுக்கோட்டை, நவ.2- இளம் வயதிலேயே மாணவர்கள் அறிவியல் மனப்பாண்மையை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்க லாம் என்றார் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலெட்சுமி. தமிழ்நாடு அறிவியல் இயக்கமும், புதுக்கோட்டையை அடுத்த அரசம்பட்டி யில் உள்ள சண்முகநாதன் பொறியியல் கல்லூரியும் இணைந்து 27-ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டை சனிக்கிழமை நடத்தியது. சண்முகநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மாணவர்கள் 182 ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.  இதில் பனங்குளம் வடக்கு, தெற்கு தொண்டைமான்ஊரணி, ஒடப்பவிடுதி, தட்டாமனைப்பட்டி ஆகிய அரசு நடு நிலைப்பள்ளி, மருதாந்தலை, புனல் குளம் ஆகிய அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ராயபுரம் எஸ்கேடி காந்தி உயர்நிலைப்பள்ளி,  புதுக்கோட்டை சென்மேரீஸ், மவுண்சீயோன், வைரம்ஸ் ஆகிய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த கட்டுரைகள் சிறந்த ஆய்வுக் கட்டுரைகளாக தேர்வு செய்ய்பபட்டன.  இவர்கள் வருகின்ற நவ.16, 17 தேதிகளில் வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் நடைபெறும் மாநில மாநாட்டில் பங்கேற்பர். மாநாட்டில் கலந்துகொண்ட மாணவர்களை வாழத்தி முதன்மைக் கல்வி அலுவலர் பேசியது: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உங்களுக்கு மிகப்பெரிய தளம் அமைத்துக் கொடுத்து இருக்கிறது. இத்தனை பேருக்கு மத்தியில் இளம் விஞ்ஞானி என்ற அங்கீகாரம் உங்களு க்கு கிடைத்திருக்கிறது. உங்களிடம் மிகப்பெரிய திறமையை வெளிப் படுத்தத் தயங்கக்கூடாது. ஆசிரியர்க ளிடம் தைரியமாக கேள்விகளைக் கேட்க வேண்டும். ஆசிரியர்களின் உதவி யோடு சுயமாக சிந்தித்து ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.  பல தோல்வி களைச் சந்தித்துத்தான் தாமஸ் ஆல்வா எடிசன் மிகப்பெரிய விஞ்ஞானியாக மாறினார். இங்கே மாநில மாநாட்டுக்கு தேர்வு செய்யப்படாத மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. தொடர்ந்து முயற்சியுங்கள். உங்க ளுக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்தி ருக்கிறது என்றார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி  நிறுவன முதுநிலை விஞ்ஞானி ஆர். ராஜ்குமார் பேசும்போது: இளம் வயதி லேயே அறிவியல் மனப்பாண்மையை, ஆய்வு மனப்பாண்மையை உரு வாக்குவதுதான் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் நோக்கம். இங்கே சிறப்பான ஆய்வுக்கட்டுரைகளை மாணவர்கள் சமர்ப்பித்து இருப்பதன் மூலம் மாநாட்டின் நோக்கம் வெற்றி யடைந்துள்ளது. இங்கே சமர்ப்பிக் கப்பட்ட பல ஆய்வுக்கட்டுரைகள் முனைவர் பட்ட ஆய்வுக்கு நிகரானது. எதிர்காலத்தில் மிகப் பெரிய அறி வியல் ஆய்வுக்கான விதைகள் இங்கே தூவப்பட்டுள்ளது. அறிவியல் என்பது விஞ்ஞானக் கூடத்திற்குள் மட்டும் இருப்பதல்ல. அறிவியலை, தொழில்நுட்பத்தை சமூக முன்னேற் றத்திற்காக, பசியை, வறுமையை ஒழிப்பதற்காக பயன்படுத்த நீங்கள் முன்வர வேண்டும் என்றார். அறிவியல் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அ.அமலராஜன் பேசியது: இளம் விஞ்ஞானிகள் சமூ கத்திற்கு பயன்படும் கருவிகளை தயா ரிப்பதற்கு முன்வர வேண்டும். எதிர்கா லத்தில் சுர்ஜித் போன்ற குழந்தைகளை நாம் எக்காரணம் கொண்டும் நாம் இழந்துவிடாக்கூடாது. நீங்கள் பார்க்கிற அனைத்தையும் கேள்விக்கு உட்படுத்தி விடையைத் தேடுங்கள். இங்கே 364 இளம் விஞ்ஞானிகள் இங்கே உருவாக்கப்பட்டு இருக்கிறார் ்கள் என்பது மிக் முக்கியமானது என்றார். விழாவிற்கு அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமை வகித்தார். கல்லூரி செயலா ளர் மு.விஸ்வநாதன், முதல்வர் குழு.முத்துராமு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாளாளர் பிச்சையப்பா மணிகண்டன் வெற்றிபெற்ற மாண வர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டுரை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் எம்.வீரமுத்து நிகழ்வின் நோக்கத்தை விளக்கிப் பேசினார். நிர்வாகிகள் எல். பிரபாகரன், கி.வெண்ணிலா, மா.சிவா னந்தம், ஆர்.நமச்சிவாயம், எம்.முத்தை யா, இ.பவுனம்மாள் உள்ளிட்டேர் பேசினர்.  முன்னதாக அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் எம்.முத்துக் குமார் வரவேற்க, முனைவர் எம்.வரதரா ஜன் நன்றி கூறினார். விழாவில் 364 மாண வர்கள் மற்றும் வழிகாட்டி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.