tamilnadu

குடியுரிமை சட்டம் ஆதரவுப் பேரணி பாஜகவைச் சேர்ந்த 701 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை, பிப்.29- குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து அனுமதியின்றி பேரணி நடத்தியதாக புதுக்கோட்டையில் பாஜக வை சேர்ந்த 701 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து தமிழ கம் முழுவதும் வெள்ளிக்கிழ மையன்று பாஜகவினர் வன் ்முறையைத் தூண்டும் வகை யில் முழக்கங்கள் எழுப்பி மாவட்ட தலைநகரங்களில் பேரணி நடத்தினர். புதுக் கோட்டையில் அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் நாகராஜன் தலைமையில் இந்தப் பேரணி நடை பெற்றது.  பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என பல்வேறு தரப்பினர் காவல் துறையினரிடம் முறையிட்ட னர். காவல்துறையும் பேரணி க்கு அனுமதி இல்லை என்றே சொல்லிவந்தனர். இந்நிலையில், புதுக் கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து அண்ணாசிலை வழியாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பாஜகவினர் நடத் திய பேரணியை போலீசார் தடுக்கவில்லை.  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் மாவட்ட சிறை அருகேதான் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி கலைந்துபோகச் செய்தனர்.  போலீசாரின் இந்நடவ டிக்கைக்கு பல்வேறு தரப்பி னரும் எதிர்ப்புத் தெரி வித்தனர். இந்நிலையில், பாஜக வினர் அனுமதியின்றி பேரணி யில் ஈடுபட்டதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதாகவும் பாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி மற்றும் 700 பேர் மீது புதுக்கோட்டை நகர காவல் நிலையத்தினர் சனிக் கிழமையன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் பாஜகவினர் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

;