tamilnadu

சிதம்பரம் மெட்ரிக்  பள்ளியில் முப்பெரும் விழா

 பொன்னமராவதி, அக்.2- பொன்னமராவதி வலையபட்டி சிதம்பரம் மெட்ரிக்கு லேசன் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் - தாளாளர் வ.சித. பழனியப்பன் பிறந்த நாளை முன்னிட்டு நல்லாசிரி யர்களுக்கு கல்வித்தந்தை பழநியப்பனார் விருது வழங்கு தல், புதுப்பிக்கப்பட்ட கணினி ஆய்வகம் திறப்பு விழா மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கும் விழா எனும் முப்பெரும் விழா பள்ளித் தாளாளர் வ.சித.பழ.வள்ளியம்மை ஆச்சி தலைமையில் நடைபெற்றது. பள்ளி இயக்குநர் வ.சித.பழ.சிதம்பரம் வரவேற்றார். இலுப்பூர் மதர் தெரசா கல்விக்குழும இயக்குநர் முனை வர் திருமா.பூங்குன்றன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளையும் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார். பள்ளி முதல்வர் வே.முரு கேசன், தனி அலுவலர் நெ.இரா.சந்திரன், துணை முதல் வர்கள் கி.வைதேகி, க.கலைமதி மற்றும் பள்ளியின் கணினித்துறை ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆசிரியை இரா.கீதா நன்றி கூறினார்.