புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரதி முற்றம் சார்பாக பெருந்தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கு விருது வழங்கி பாராட்டும் விழா அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடை பெற்றது. பாரதி முற்றம் நிறுவனர் க.அஜாய்குமார் கோஷ் தலைமை வகித்தார். சிறப்பாக பணியாற்றும் அரசு மருத்துவமனை செவிலியர், முதல்நிலை ஆய்வக நுட்புநர், நகராட்சி சுகாதார ஆய்வாளர், காவல் ஆய்வா ளர் ஆகியோரின் பணியை பாராட்டி அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ. ரெத்தினசபாபதி சால்வை அணிவித்து விருது வழங்கினார்.