tamilnadu

குழந்தைகளுக்கு எதிரான புகார்களுக்கு 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்

புதுக்கோட்டை, பிப்.24-  புதுக்கோட்டை நகராட்சி சந்தைப்பேட்டை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின விழா நடைபெற்றது. இதில் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தலைமை வகித்து பேசுகையில், பெண் குழந்தைகள் எதிர்பாராத நேரங்க ளில் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிரான புகார்களுக்கு 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார்.  மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மாவட்ட சமூகநல அலுவலர் ரேணுகா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, நகராட்சி ஆணையர் ஜீவாசுப்பிர மணியன், கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் இளையராஜா கலந்து கொண்டனர்.