tamilnadu

img

பாஜக - ஜேடியூ மோதல் முற்றுகிறது

பாட்னா:
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) - பாஜக கூட்டணி ஆட்சிநடைபெற்று வருகிறது. நிதிஷ் குமார் முதல்வராகவும், பாஜக-வைச் சேர்ந்த சுஷில் குமார் மோடி துணைமுதல்வராகவும் இருந்து வருகின்றனர். 

இருப்பினும் அண்மைக்காலமாக, பாஜக-வுக்கும் ஜேடியூ-வுக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மத்திய அமைச்சர் பதவி ஒதுக்கீட்டில் இருகட்சிகளுக்குமான மோதல் தீவிரம் அடைந்தது. ஜேடியூவிற்கு ஒரு அமைச்சர் பதவி மட்டுமே தருவோம் என்று மோடி கூறிவிட்டார்.இதனால் கடுப்படைந்த நிதிஷ் குமார், பீகார் அமைச்சரவையை விரிவாக்கம் செய்து, தனது கட்சியைச் சேர்ந்த 8 பேருக்கு புதிதாக அமைச்சர் பதவி வழங்கினார். பாஜகவினர் ஒருவருக்குக் கூட இடம் அளிக்கவில்லை.bjp

இதனிடையே மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றில், இப்தார் விருந்து நிகழ்ச்சியில் நிதிஷ் குமார், சுஷில்குமார் மோடி, லோக் ஜனசக்தி கட்சியினர் பங்கேற்ற படத்தை பகிர்ந்து, அதில், இப்தார் விருந்தில் இப்படி இணைகின்றவர்கள் ஏன் நவராத்திரி பண்டிக்கைக்கு ஒன்று சேருவதில்லை என, நிதிஷை குறிவைத்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு நிதிஷ் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். “சிலர் எப்போதும் தலைப்புச் செய்தியாக இருக்க வேண்டும் எனவிரும்புகின்றனர். அவர்கள் ஒருவிஷயத்தை மறந்துவிடுகின்றனர். ஒவ்வொரு மதமும் அன்பையும் மரியாதையையும் தான் போதிக்கின்றன” என்று நிதிஷ் குறிப்பிட்டுள்ளார்.

;