பீகாரில் பெண்ணை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்து அவரது மகனை கயிற்றால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் பக்சர் மாவட்டம் சைகின் கிராமத்தில் சனிக்கிழமையன்று இளம் பெண் ஒருவர் தனது 5 வயது மகனுடன் வங்கிக்கு சென்றார். வேலை முடிந்து அவர் திரும்பிய போது அவரை ஏழு பேர் கொண்ட கும்பல் அவரை காட்டுப்பகுதிக்குள் இழுத்துச்சென்றது. இதையடுத்து 7 பேரும் அப்பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த பெண்ணின் மகனை கழுத்தை நெறித்து அருகில் உள்ள கால்வாயில் வீசி விட்டு சென்றனர்.
பின்னர் அந்த வழியாக வந்த ஒருவர் இருவரையும் மீட்டு சதர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கே சிறுவன் மரணமடைந்து விட்டதாக கூறினர். அப்பெண் சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தம்ரான் பிரதேச காவல் அதிகாரி கே.கே சிங் கூறியதாவது: வழக்கில் தொடர்புடைய முன்னி ராம் என்பவர் கைது செய்யப்ட்டுள்ளார். மற்றவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துளாளர்.