tamilnadu

img

15 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் வாழ்வு பாதுகாக்கப்படுமா?

சென்னை, ஏப்.25- தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தனியார்  நிறுவனங்களுக்கு பால் வழங்கி வரும் 15  லட்சம் உற்பத்தியாளர்களின் வாழ்வை பாதுகாக்க தமிழக முதல்வர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் கே.முகமது அலி விடுத்திருக்கும் அறிக்கை  வருமாறு:-

கொரானா வைரஸ் பாதிப்பினைத் தடுக்கும் நடவடிக்கையாக நெருக்கடி நிலை  அமல்படுத்தப் பட்டுள்ள சூழலில், தமிழ கத்தில் அத்தியாவசியப் பொருளாகிய பால்  உற்பத்தி மற்றும் விநியோகம் அனும திக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பால் உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, கால்நடைத் தீவனங்களின் விலை கூடியுள்ளது. கடுமையான தட்டுப்பா டும் உள்ளது. உதாரணமாக, பூசா தீவனம்  (கோதுமை, அரிசி தவிடு) 35 கிலோ மூட்டை  மார்ச் மாதத்தில் ரூ.750 ஆக இருந்தது. ஆனால் தற்போது இதன் விலை ரூ.1250  ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வைக்கோல், சோளத் தட்டை, புண்ணாக்கு ஆகியவற்றின்  விலையும் கூடியுள்ளது. போக்குவரத்து பிரச்சனை இருப்பதால் தட்டுப்பாடும் உள்ளது.

கோடைக்காலம் என்பதால் பசுந்தீவ னங்களும் கிடைப்பதில்லை. “ஆவின்”, ஐபிஎல் மற்றும் அடர்தீவனங்களும் கிடைக்க வில்லை. “ஆவின்” தீவனம் தரமானதாக இல்லை. எனவே, தமிழக அரசு உடனடியாக தலை யிட்டு தீவனங்களின் விலை உயர்வை தடுத்து நிறுத்த வேண்டும். தரமான தீவனங்களை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

கடுமையான சிரமங்களுக்கிடையில், ஆவினுக்கு பால் வழங்கக் கூடிய பால் உற்பத்தியாளர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ.5  வீதம் ஊக்கத் தொகையாக பாலின் கொள்  முதல் விலையுடன் சேர்த்து வழங்க வேண்டும்.

டீ கடைகள், ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்கள், ரொட்டிக்கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால், தனியார் பால் விற்பனை பெருத்த தேக்கமடைந்துள்ளது. பால் கொள்முதலைக் குறைத்ததோடு, லிட்டருக்கு ரூ.5 வரை கொள்முதல் விலையையும் குறைத்துள்ளனர். எனவே, பால் உற்பத்தியாளர்கள் வழங்குகிற பால் முழுவதையும் ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும். நெருக்கடி நிலை தொடர்ந்தாலும், டீ கடைகள், ஓட்டல்கள், ஐஸ்கிரீம் பார்லர்கள் போன்ற வற்றை திறந்து செயல்படுவதற்கு தமிழக அரசு அனுமதிக்க வேண்டும்.

தற்போது, தமிழகத்தில் “ஆவின்” பால்  விற்பனை உயர்ந்துள்ளது. ஆனால் “ஆவின்” பால் விற்பனை செய்கிற முகவர்க ளுக்கு கடந்த பல வருடங்களாகவே வழங்  கப்படுகிற கமிஷன் தொகை 1 லிட்டருக்கு ரூ.1.60 உயர்த்தப்படாமலேயே உள்ளது. ஆனால் தமிழகத்தில் தனியார் பால் விற்பனை நிறுவனங்கள் 1 லிட்டருக்கு ரூ.3  லிருந்து ரூ.4 வரை கமிஷன் தொகை கொடுக்கிறது. எனவே “ஆவின்” நிர்வாகம் தற்போதுள்ள கமிஷன் 50 சதம் உயர்த்தி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் சுமார் 5 லட்சம் குடும்பங்கள்  சுமார் 11 ஆயிரம் ஆரம்ப சங்கங்கள் மூலமாக  தினமும் சுமார் 35 லட்சம் லிட்டர் பாலை ஆவி னுக்கு வழங்குகிறது. இது தவிர சுமார் 10 லட்சம் குடும்பங்  கள் தினமும் சுமார் 1 கோடி லிட்டர் பாலை  தனியார் பால் விற்பனை நிறுவனங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கி றார்கள். இம்மக்க ளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகை யில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.